படைப்புகளுக்கு இருப்பது போன்ற சாதாரண பெயர்கள் அல்ல படைத்தவனின் திருப்பெயர்கள். மாறாக அவை அனைத்தும் இறைவனின் தன்மைகள். அவனது சிறப்புத் தகுதிகள் ஆகும்.
அந்தச் சிறப்புத் தன்மைகளையும் தகுதிகளையும் நமது வாழ்வில் நடைமுறைப்படுத்த முயல வேண்டும் என்பதே இத்தொடரின் நோக்கம்.
இதனையே இறைவசனம் இவ்வாறு குறிப்பிடுகின்றது: “கூறுவீராக: அல்லாஹ்வின் வர்ணத்தை மேற்கொள்வீர்களாக! அல்லாஹ்வின் வர்ணத்தைக் காட்டிலும், யாருடைய வர்ணம் சிறந்தது? மேலும் நாங்கள் அவனுக்கே பணிந்து வாழ்பவராய் இருக்கின்றோம்.”
(திருக்குர்ஆன் 2:138)
வர்ணம் என்றால் என்ன? அவற்றை எவ்வாறு மேற் கொள்வது? மௌலானா மௌதூதி (ரஹ்) அவர்கள் இதனை அழகாக விளக்குகிறார்:
கிறிஸ்தவம் தோன்றுவதற்கு முன்பு யூதர்களிடம் ஒரு பழக்கம் இருந்தது. எவராவது யூத மதத்தைத் தழுவினால் முதலில் அவரைக் குளிப்பாட்டுவார்கள். இவ்வாறு நீராடப்படும்போது அவருடைய முந்தைய பாவங்கள் அனைத்தும் அதில் கரைந்து விடுகின்றன என்றும் அவருடைய வாழ்க்கை புதியதோர் நிறத்தைப் பெறுகின்றது என்றும் அவர்கள் கருதி வந்தனர்.






Reviews
There are no reviews yet.