பாலைவனச் சிங்கம் உமர் முக்தார்
1912ல் இத்தாலி லிபியாவை துருக்கியிடம் இருந்து கைப்பற்றியது. அதைத் தொடர்ந்து 20 வருடங் களாக இத்தாலியின் காலனியாதிக்கத்தை எதிர்த்து உமர் முக்தார் இத்தாலிக்கு எதிராக கொரில்லா யுத்தத்தை மேற்கொண்டார். முசோலினிக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்த உமர் முக்தார் நடத்திய இந்த விடுதலைப் போர் 20 ஆண்டுகள் நீடித்தது. அன்று உலகின் மிகவும்பலம் பொருந்திய பெனிட் டோ முசோலினி உமர் முக்தாரின் பாலைவன புவியி யல் போர் தந்திரத்தை புரிந்து கொள்ள முடியாமல் திக்கு முக்காடி போனார் என்பது வரலாறு.
இயற்கையில் உமர் முக்தார் மதரஸாவில் குர்ஆனை போதிக்கும் ஆசான். ஆனால், யுத்தக்களத்தில் மிகச் சிறந்த கொரில்லா போர் தந்திரங்களை கையாண்டார். உமர் முக்தார் மேற்கொண்ட போர் தந்திரம் மற்றும் தாக்குதலின் மூலம் பல நேரங் களில் இத்தவலிய படையை நிலைகுலைய செய் திருக்கிறார். 20 ஆண்டுகளாக இத்தாலிக்கு எதிராக உமர் முக்தார் மேற்கொண்ட கொரில்லா யுத்த முறையையும் லிபியாவின் அன்றைய கால அரசியலையும் மையமாக வைக்கப்பட்டு நாவல் வடிவில் இப்புத்தகம் எழுதப்பட்டுள்ளது.






Reviews
There are no reviews yet.