சபையில் அமர்ந்து இருக்கும் சிலரை மட்டும் மக்கள் பலாப் பழத்தில் ஈ மொய்ப்பதுபோல் மொய்ப்பார்கள்.. பார்த்திருக் கின்றீர்களா? அவர்கள் பேசப்பேச ரசிப்பார்கள். அவர்களின் உரையாடலில் இரண்டறக் கலப்பார்கள்.
அதே சமயம் நாம் பேசத் தொடங்கினால்.. அந்த மக்கள் எழுந்து சென்றுவிடுவார்கள். ஏன்? இத்தனைக்கும் அந்தச் சிலரைவிட நாம் அதிகம் படித்தவர்களாக இருப்போம். வசதி உடையவர்களாக இருப்போம். இருந்தும் என்ன? நம்மிடம் இல்லாத ஏதோ ஒரு காந்த சக்தி அவர்களிடம் இருக்கத்தானே செய்கிறது. அந்த காந்த சக்தியை இனம் காட்டும் முயற்சியே இந்நூல்
எனவே..
கடுகடுத்த முகத்தைப் புன்னகை முகமாக மாற்றுங்கள்.
கஞ்சத்தனத்தைப் புறந்தள்ளி கருணை உள்ளத்துடன் நடந்து கொள்ளுங்கள்.
கோபத்தை விட்டொழித்து சகிப்புத் தன்மையைக் கையாளுங்கள்.
தலைக்கனத்தை அகற்றிவிட்டு தன்னம்பிக்கையை வளர்த்தெடுங்கள்.
வாழ்க்கை கொஞ்ச நாள்களே. அதில் கவலைகளுக்கு இடம் கொடுக்காமல் வாழ்க்கையை வாழ்ந்து காட்டுவோம், வாருங்கள்!






Reviews
There are no reviews yet.