கருத்துவேறுபாடுகள் அருளா? அழிவா?
கருத்துவேறுபாடுகள் சமுதாயத்திற்கு அழிவல்ல. அருளே என்பதை மிக அழகாக இந்த நூலில் சொல்லி யுள்ளார் ‘சொல்லேர் உழவர்’ மௌலவி நூஹ் மஹ்ழரி அவர்கள். நல்லோர் கையிலுள்ள செல்வம் நாட்டு மக்களுக்குப் பயன்படுவது போல, நல்லறிஞர்களுக்கு இடையிலான கருத்துவேறுபாடுகள் சமுதாயத்தை அடுத்த கட்டத்தை நோக்கி நகர்த்தும் என்று ஆணித்தர மாகக் கூறும் நூலாசிரியர், அதே சமயம் சின்னச் சின்ன பிரச்னைகளில் பிளவுபட்டு, ஒற்றுமையை மறந்து ஓயாது சண்டையிட்டுக்கொள்ளும் போக்கு சமுதாயத்தை அழிவுப்படுகுழியில் தள்ளிவிடும் என்றும் எச்சரிக்கிறார்.
இறுதித்தூதர் முஹம்மத் (ஸல் ) அவர்களும், நபித் தோழர்களும், நபித்தோழர்களுக்குப் பிந்தைய தலைமுறை யினரும், இமாம்களும் கருத்துவேறுபாடுகளின் போது எப்படி நடந்துகொண்டார்கள் என்பதை இந்த நூலில் மௌலவி அவர்கள் அற்புதமாக விளக்கியிருக்கிறார்.
சின்னச் சின்ன கருத்துவேறுபாடுகளில் சிக்குண்டுச் சிதறிக் கிடக்கும் இன்றைய முஸ்லிம் சமுதாயத்துக்கு. குறிப்பாகத் தமிழக முஸ்லிம்களுக்கு இந்த நூல் ஓர் அருட்கொடை.






Reviews
There are no reviews yet.