இஸ்லாமிய மக்கள் இன்று எவ்வளவு தூரம் பிறரால் அலைக்கழிக்கப்பட முடியுமோ அவ்வளவு தூரம் அலைக்கழிக்கப்பட்டு வருகிறார்கள். காரணம், புரிந்து செயல்படுவதில் ஏற்பட்டுள்ள பாதிப்பே. இஸ்லாம் அல்லாஹ்வுடைய மார்க்கம், அல்லாஹ்வினால் பாதுகாக்கப்படும் மார்க்கம். அதனால், எவ்வளவுதான் அலைக்கழிக்கப் பட்டாலும் பயணம் பாதுகாப்பாகவே முடியும். என்றாலும் நம்மீதும் கடமைகள் இருக்கின்றன, அலைக்கழிக்கப்படுவதில் இருந்து தாக்குப் பிடிப்ப தற்கு நாமும் முயற்சி செய்ய வேண்டியவர்களாக இருக்கிறோம்.
அந்த முயற்சியை எடுத்துச் செல்பவர்களாக அழைப்பாளர்கள் விளங்குகிறார்கள். அவர்கள் சரியான முறையில் புரிந்து மக்களை அமைதியான பயணத்திற்கு இட்டுச் செல்ல வேண்டியவர்களாக இருக்கிறார்கள். அதற்கு உதவும் விதத்தில் இந்த அழைப்பின் வழியில் அலைக்கழியாத பயணம்’ என்ற நூலை இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் அமீர் உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர் அவர்கள் எழுதியிருக்கிறார்கள். இந்த நூலை தமிழ் வாசகர்கள் மொழிநடைக்கு ஏற்றவாறு மாற்றம் செய்து ‘அழைப்பாளர் கையேடு’ எனும் தலைப்பில் வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறோம்.






Reviews
There are no reviews yet.