இந்த நூல் சிந்தனையை உசுப்பி, தூக்கத்திலிருந்து அதனை எழுப்பி, முகம் கை கால்களை கழுவி, இறை சந்நிதிக்கு அதனை அழைத்துச் செல்ல முயற்சிக்கிறது என்று கூறினால் அது மிகையல்ல என்று நினைக்கிறேன். நாட்பட்டு மரத்துப்போன உள்ளங்கள் சிந்தனைக்கு பஞ்சம் நிலவுகின்ற நெஞ்சங்கள் நெகிழ்வதற்கு காலம் எடுக்கலாம். என்றாலும் அல்குர்ஆனின் ஆகர்ஷிப்பால் உள்ளங்கள் உணர்வு பெறுமல்லவா?
– உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர்
மனித குணவியல்புகளில் காணப்படும் குறைபாடுகளை களைந்து புதிய யுகத்திற்கேற்ப தன்னைத்தானே தயார்படுத்திக் கொள்வதற்கான பொருள்கோடலை நூலாசிரியர் வழங்கியுள்ளார். அதனைத் தோழர் இம்தியாஸ் அறபு மொழியின் சுவை மாறாது தமிழ்ப்படுத்தியுள்ளார்.






Reviews
There are no reviews yet.