இலக்கிய ஆளுமை எவரையும் நான் உடனடியாக ஆட்கொள்வது கிடையாது. ஜரீனாவின் இலக்கியப் படைப்புகளை நான் அடிக்கடி வாசித்திருக்கிறேன். அவர் இதுவரை பதின்மூன்று நூல்களைத் தந்துள்ளார். அவரது பல நாவல்கள் தேசிய பத்திரிகையான ‘மித்திரன்’ வாரமலரில் தொடர்கதைகளாக பிரசுரிக்கப்பட்டவை. பல நூல்கள் பல மீள்பதிப்புக்களைக் கண்டுள்ளன.
அத்தோடு அவரது பல நூல்கள் இலங்கை தேசிய நூலக ஆவணவாக்கல் சபையின் அங்கீகாரம் பெற்றவை. இவை ஒரு பெரும் சாதனையாகவே கொள்ள வேண்டும். ‘மித்திரன்’ வாரமலர் பத்திரிகையில் தொடராகப் பிரசுரமான “அவளுக்கு” தெரியாத ரகசியம்” எனும் இந்த நாவலும் அவரை இலங்கையில் முன்னிலை நாவலாசிரியையாக பதிவு. செய்வதாக அமைந்திருப்பதாகவே கருதுகிறேன் பழம்பெரும் முன்னணி பெண் எழுத்தாளர்களின் வரிசையில் ஜரீனா முஸ்தபாவும் தடம் பதித்துவிட்டா என்பதை உறுதியாகப் பதிவு செய்கிறேன். அவரது இலக்கியப் பணி தொடர வேண்டுமென வாழ்த்திப் பிரார்த்திக்கிறேன்.


Reviews
There are no reviews yet.