டாக்டர் ஷாபியின் அநீதிக்கு எதிரான போராட்டம்
இந்த நூலை எழுதுவதற்குத் தொடங்கும் வரை டாக்டர் ஷாபி சிஹாப்தீனுடள் எனக்கு அறிமுகம் இல்லை. குருநாகலில் ஷாபி என்று ஒரு வைத்தியர் ஒரு போது நாடாளுமன்றத் தேர்தலில் களமிறங்கியிருக்கிறார் என்றும் அவர் மிக நல்ல மனிதர் என்றும் காது வழிச் செய்திகளால் அறிந்திருந்தேன். அவர்தான் இவர் என்பது அவர் கைதான பின்னர்தான் உறுதியானது.
டாக்டர் ஷாபிக்கு நடந்தது போல் கடந்த காலங்களில் உலகம் முழுக்க நடந்த துன்பியல் சம்பவங்கள் இருபத்தைந்தைத் தொகுத்து 2010 ஆம் ஆண்டு ‘ஒரு குடம் கண்ணீர்’ என்ற தலைப்பில் எழுதி ஒரு நூலாக வெளியிட்டிருந்தேன். அந்த உணர்வுத் தூண்டல் தான் இந்த நூலை எழுத என்னை ஆர்வமூட்டியிருக்க வேண்டும்.






Reviews
There are no reviews yet.