எனது டயரின் மறுபக்கம் பாகம் – 2
எம்மை சூழ்ந்திருக்கின்ற வானங்களையும் நாம் வாழுகின்ற பூமியையும் இவை இரண்டிற்கும் இடையேயுள்ள அனைத்தையும் வடிவமைத்து படைத்துப் பரிபாலனம் செய்கின்ற வல்ல றப்பு அல்லாஹுத் தஆலாவின் வல்லமையைப் பறைசாற்றுகின்ற பல கோடி உயிரினங்களும் தாவர வர்க்கங்களும் மிகப் பிரமாண்டமான படைப்புகளும் பரந்து கிடப்பதை நாம் தினமும் எமது கண்களால் கண்டு கொண்டிருக்கின்றோம்.
அல்லாஹுத் தஆலா ஏற்படுத்தி வைத்திருக்கின்ற இந்த அற்புதமான ஏற்பாடு களையும் படைப்புகளையும் பற்றி அறிந்து, சிந்தித்து, ஆராய்ந்து உணர்வு பெற்று இறையுணர்வோடு உளத்தூய்மையுடன் ஈமானின் அடர்த்தியை அதிகரித்துக் கொண்டு வாழுமாறு அல்லாஹுத் தஆலா குர்ஆனுக்கூடாக எமக்கு அழைப்பு விடுத்துக் கொண்டிருக்கின்றான். அது மாத்திரமல்லாமல் அவனது படைப்புகளுக்குள் புதைந் திருக்கும் அத்தாட்சிகளை புரிந்து கொள்வதற்கான அறிவையும் ஆற்றலையும் மனித மூளையிடமும் இதயத்திடமும் கொடுத்திருக்கின்றான். மேலும் அனைத்து அறிவுக்கும் சொந்தக்காரனான அல்லாஹுத் தஆலா மனித சமூகத்திற்கு கொடுத்திருக்கின்ற அறிவின் ஒரு மிகச் சிறிய பகுதியைப் பயன்படுத்தி இன்றைய மனிதன் பல சாதனை களைப் படைத்திருக்கின்றான். அதேவேளை, அல்லாஹுத் தஆலாவின் அற்புதமான வடிவமைப்பையும் அதிசயமான படைப்பாற்றலையும் புரிந்து கொண்டிருக்கிறான். அதே வகையில் இன்றைய நவீன மருத்துவ விஞ்ஞானம் மனித உடலின் ஆழ அகலத்தை ஓரளவு புரிந்து வைத்திருக்கின்றது. மனித மூளையின் அற்புதத்தை அறிந்து கொள்ள இங்கிலாந்தின் Oxford பல்கலைக்கழகம் இந்த நூற்றாண்டைப் பிரகடனப்படுத் தியிருப்பது, 100 வருடங்கள் சென்றாலும் அல்லாஹுத் தஆலாவின் அற்புதப் படைப்புகளில் ஒன்றான மூளையைப் பற்றி படித்து முடிக்க முடியாது என்ற யதார்த்தத்தைச் சொல்லிக் கொண்டிருக்கின்றது.





Reviews
There are no reviews yet.