எறும்புகள் சொல்லும் செய்தி? குர்ஆனிய பாடம்
وَمِنَ النَّاسِ مَنْ يَعْبُدُ اللَّهُ عَلَى حَرْفٍ
“இன்னும்: மனிதர்களில் ஓர் உறுதியும்
இல்லாமல்) ஓரத்தில் நின்று கொண்டு அல்லாஹ்வை வணங்குகிறவனும் இருக்கிறான். அவனுக்கு ஒரு நன்மை ஏற்படுமாயின் அதைக் கொண்டு அவன் திருப்தியடைந்து கொள்கிறான்; ஆனால் அவனுக்கு ஒரு சோதனை ஏற்படுமாயின், அவன் தன் முகத்தை (அல்லாஹ்வை விட்டும் ) திருப்பிக் கொள்கிறான்; இத்தகையவன் இம்மையிலும் மறுமையிலும் நஷ்டமடைகிறான் இதுதான் தெளிவான நஷ்டமாகும்.”(அல்குர்ஆன் 22:11)
‘அலா ஹர்ஃபின்’ என்ற வார்த்தைக்கு, எழுத்துக்களில் நின்றுகொண்டு அல்லாஹ்வை வணங்குபவர் என்ற பொருளும் உண்டு. அவ்வாறெனில் மேலே குறிப்பிடும் வசனத்தின் இன்னொரு விளக்கத்தை புரிந்து கொள்ள முடியும். அதாவது இவ்வுலக நலனையும்,மறுமை வெற்றியையும் இழக்கும் வகையில் மார்க்கத்தை வெறுமனே எழுத்துக்களின் மூலம் வாசிப்பவர்களின் நிலையை குர்ஆன் விமாசிக்கிறது. ஆன்மாவை இழந்துவிட்ட வடிவம், அர்த்தமில்லாத ராகங்கள், சிந்தனையில்லாத எழுத்துக்கள் இவை தான் இன்று இஸ்லாத்தின் பெயரால் சமூகத்தை கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றன.






Reviews
There are no reviews yet.