கவலைப்படாதே’ (லா தஹ்ஸன்) இது டாக்டர் ஆமிழ் பின் அப்தில்லாஹ் அல்கர்னீ என்பவரால் அரபு மொழியில் எழுதப்பட்ட நூல். அதிகமாக விற்பனையான நூல்களில் இதுவும் ஒன்று.
மனித வாழ்க்கையில் ஏற்படுகின்ற சிக்கல்களுக்குத் தீர்வு காணும் முயற்சியில், மிகவும் கவனத்துடன், படிப்போர் மனதைத் தொடும் வகையில், சிறந்த முறையில் இந்த நூல் அமைந்துள்ளது. குழப்பம், தடுமாற்றம், நம்பிக்கை யின்மை, பதற்றம், கவலை, சோர்வு, துக்கம், அமைதி யின்மை, விரக்தி, ஏமாற்றம், இழப்பு, தோல்வி ஆகிய நெருக்கடிகளை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பது பற்றி இந்த நூல் அலசுகின்றது.
மகிழ்ச்சியுடன் வாழு மனநிம்மதியுடன் வாழு நற்செய்தியுடன் வாழு நம்பிக்கையுடன் வாழு கவலைப்படாதே! இதுவே இந்த நூலின் முழக்கம்






Reviews
There are no reviews yet.