மௌலானா மௌதூதி (ரஹ்) அவர்கள் நாள்தோறும் மாலைநேரத் (அஸர்) தொழுகைக்குப் பிறகு லாகூரில் தம் இல்லத்தின் முன்பகுதியில் உள்ள புல்வெளியில் வந்து அமர்வார்கள். அப்பொழுது அவரைச் சந்திக்க மாணவர்கள், இளைஞர்கள், பேராசிரியர்கள், அரசியல் தலைவர்கள், இயக்கத் தொண்டர்கள், வெளிநாட்டுத் தோழர்கள் என்று பலதரப்பட்ட மக்களும் வந்து குழுமுவார்கள். அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு மௌலானா அவர்கள், எளிமை யான முறையில் சுருக்கமாகப் பதில் அளிப்பார்கள். மக்ரிப் தொழுகைக்கான நேரம் வரை இந்தக் கேள்வி – பதில் அமர்வு நடைபெறும். பிறகு எல்லாரும் தொழுதுவிட்டுக் கலைந்து சென்றுவிடுவார்கள்.
மதம், கல்வி, அரசியல், பொருளாதாரம், சமூகம், ஒழுக்கம், மரணம், மறுமை போன்ற பல்வேறு விஷயங்கள் பற்றியும் மௌலானாவிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்தான் இந்நூல்!





Reviews
There are no reviews yet.