மஹ்ஜபீன் சுல்தான் சலாஹூத்தீன் அய்யூபி வரலாற்றுப் புதினம்
முஸ்லிம்களின் ஆதிக்கத்திலிருந்து பலஸ்தீனை ஆக்கிரமிக்க சிலுவைப் படையணிக்கு குறைந்தது ஒரு வீரனையாவது அளிக்காத ஒரு வீடுகூட ஐரோப்பாவில் இருந்ததில்லை! ஆர்ப்பாட்டப் போர்ப் பாட்டுப் பாடி வந்த படை அலைகளால் அலைக்கழிக்கப்படாத மாபெரும் தடுப்புச் சக்தியாக விளங்கியது. சுல்தான் ஸலாஹுத்தீனின் வீரம் ஒன்றுதான்!
சிலுவை யுத்தத்தை முஸ்லிம்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் நடந்த யுத்தம் என்று மட்டும் சொல்வது பொருந்தாது. முஸ்லிம்கள் வெற்றி பெற்றார்கள் என்று சொல்வதை விட மேற்கைக் கிழக்கு வென்றது என்று சொல்வது மெத்தப் பொருந்தும்.
12ம் நூற்றாண்டின் ஒரு பகுதியில் ஸலாஹுத்தீன் பெற்ற வெற்றி 20ம் நூற்றாண்டின் முதல் பகுதி வரை நிலை பெற்றிருந்தது.
புனித பூமியின் ஒரு பகுதி இன்று யூதர்களால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் நிலையில், சுல்தான் ஸலாஹுத்தீன் அவர்களின் みあみみ செயல்களை பின்னிப் பிணைந்து படைக்கப்பட்டிருக்கும் ‘மஹ்ஜபீன்’ என்ற இந்த நவீனம் வரலாற்று நிகழ்ச்சிகளை மாத்திரமின்றி வரலாற்றுப் பின்னணியையும் உலகுக்கு நல்ல முறையில் சொல்லிக் காட்டுகிறது.






Reviews
There are no reviews yet.