முஸ்லிம் பெண்களின் பிரச்சினைகளும் தீர்வுகளும்
நமது நாட்டில் இஸ்லாமிய மக்களை தேசிய நீரோட்டத்தில் இருந்து ஒடுக்குவதற்கும், ஒதுக்கி வைப்ப தற்கும் கருவிகளாக இஸ்லாமிய தீவிரவாதம், பெண்களை அடிமைப்படுத்தி கொடுமைகள் செய்கிறார்கள் போன்ற பிம்பங்களை ஏற்படுத்தி, இன்று அவற்றை ஊதிப் பெரிதாக்கிக் கொண்டிருக்கின்றார்கள். பெரும்பாலான மக்கள் இஸ்லாத்தைக் குறித்து மிகக் குறைந்த அளவிலேயே அறிந்து வைத்திருக்கின்றார்கள். அதுவும் இஸ்லாமியக் குடும்ப அமைப்பு, பெண்களுக்குக் கொடுமை இழைக்கும் வண்ணம் இருக்கிறது என்று தவறாகப் புரிந்து வைத்திருக்கின்றார்கள். இப்படிப் புரிந்து வைத்துக் குறை கூறுபவர்களில் சிலர் இஸ்லாமிய போதனைகளைப் பற்றிய முழுமையான அறிவு இல்லாததால் தவறான கருத்துக்களைக் கூறுபவர்களாக இருக்கின்றார்கள். இன்னும் சிலரோ வேண்டுமென்றே இஸ்லாமிய போதனைகள் மீது குற்றம் சுமத்துகின்றார்கள்.
இஸ்லாமியக் குடும்ப அமைப்பு குறித்துப் பலவித குறைகள் அடிக்கடி எழுப்பப்பட்டு வந்துள்ளன. இன்றைக்கு முத்தலாக், பலதார மணம், ஹலாலா போன்றவற்றைக் குறிப்பிட்டு ஒட்டுமொத்த தேசத்திலும் ஊடகங்கள் மூலமாகத் தவறான கருத்துகள் பரப்பப்படுகின்றன. இதன் மூலம் இஸ்லாத்தில் முஸ்லிம் பெண்களுக்கு சமமான உரிமைகள் தரப்படவில்லை என்ற கருத்து திட்டமிட்ட முறையில் பரப்பப்படுகின்றது. மறுபக்கம் இஸ்லாத்தைச் சரியாக அறிந்துகொள்ளாத, பொறுப்புணர்வற்ற முஸ்லிம் பெண்களில் சிலர் பலதாரமணம், முத்தலாக் போன்றவற்றின் மூலமாக பெண்களின் மீது கொடுமைகள் இழைக்கப்படு வதால் அவற்றைத் தடை செய்ய வேண்டும் என்கிற கோரிக்கையுடன் நீதிமன்றங்களில் வழக்குகளைத் தொடுத்து துன்பத்திற்கு ஆளாகின்றார்கள்.






Reviews
There are no reviews yet.