நபித்தோழர்களின் பள்ளிக்கூடம்’ புத்தகத்தின் தலைப்பே வியப்புக்குரியதாக இருக்கிறது. ஆம். நபித்தோழர்களின் பள்ளிக்கூடம் எதுவாக இருந்திருக்கும் என்பதை நம்மால் உணர முடிகிறது. அது இறைத்தூதர் பெருமானார் (ஸல்) அவர்கள் உருவாக்கிய கல்விச் சாலைதான். அங்கு பயின்ற நபித்தோழர்கள், தாங்கள் வாழ்ந்த காலத்தில் சிறந்த தலைவர்களாக, ஆளுமைகளாக, தளபதிகளாக மாறியது மட்டுமின்றி உலக வரலாற்றின் பக்கங்களில் மாற்றத்தை உருவாக்கியவர்கள்.
அல்லாஹ் தனது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மூலமாக சத்தியச் செய்தியை இந்த உலகத்தில் எடுத்து வைத்தான். அவருக்குப்பின் அந்த மகத்தான பணியை நிறைவேற்றிட தயார் செய்யப்பட்டவர்களே நபித்தோழர்கள். அவர் களுக்கான பயிற்சியை பெருமானாரின் பள்ளிக்கூடம் அளித்தது. எல்லா நேரமும் இறைத்தூதரைப் பார்த்து, கேட்டு தங்களை மாற்றிக் கொண்டார்கள்.






Reviews
There are no reviews yet.