சுதந்திரம் மனிதனின் பிறப்புரிமை, மனிதன் சுதந்திர மானவன், தான் விரும்புகின்ற மதத்தை, கொள்கையை ஏற்றுக்கொள்ள, பின்பற்ற அவனுக்குச் சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது. தான் விரும்பும் உடையை அணிய, விரும்பும் உணவை உண்ண, தன் கருத்தைச் சொல்ல, தான் விரும்பியபடி வாழ்வதற்கு மனிதனுக்கு முழுச் சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது. இவை யாவும் ஒரு வரம்பிற்கு உட்பட்டது. எல்லையற்ற, கட்டுப்பாடற்ற சுதந்திரம் எதுவும் இல்லை. சமூக அமைதிக்கு உட்பட்டுச் செயல்படுவதுதான் சுதந்திரம்.
தன் எண்ணங்களையும் செயல்களையும் கட்டுப் படுத்தும் அதிகாரம் இறைவனுக்கோ, சட்டத்திற்கோ, சமூகத்திற்கோ இல்லை எனக் கருதி மனிதன் தன் சுயவிருப்பங்களைச் சுதந்திர வேட்கை மூலம் அடைந்து கொள்ளத் துணிகிறான். இதனால் சமூக நலன்கள் சீரழிவதைப் பற்றி அவன் கவலை கொள்வதில்லை.





Reviews
There are no reviews yet.