பேசத் தயங்கும் கருப்பொருள் காதல்
வாழ்வின் அனைத்துத் துறைகளுக்கும் வழிகாட்டி யிருக்கும் இஸ்லாம் காதலுக்கும் வழிகாட்டியிருக்குமே என்பதுதான் இன்றைய இளைய சமுதாயத்தின் கேள்வி. அவ்வாறெனில் அது என்னவாக இருக்கும் என்பது அவர்களின் எதிர்பார்ப்பு.
இது ஒருபக்கம் என்றால் காதல் குறித்து பேசத் தயங்கும் அறிஞர்கள் மறுபக்கம். அந்தச் சொல்லையே ஒரு தீண்டத்தகாத வார்த்தை போன்று கருதும் மனோபாவம் பலரிடம் காணப்படுகிறது.
உண்மைக் காதல் குறித்து தெரியாத காரணத்தால் எதுவெல்லாம் நடைபெறக்கூடாதோ அதுவெல்லாம் முஸ்லிம்களிடமும் நடந்தேறுகிறது.
ஷரீஅத்தின் எல்லைகளையும் பண்பாட்டு வேலிகளையும் தாண்டும்போது வெள்ளாடுகளுக்குக் கொண்டாட்ட மாகத்தான் இருக்கும். ஆனால் பின்பொருநாள், அவை எங்கோ வெட்டப்பட்டு விழுந்துகிடக்கும்.
எனவே, இஸ்லாத்தின் பார்வையில் இதுதான் காதல் என்று சொல்லிக் கொடுக்கும் நூல் இது. காதலின் பெயரால் திக்கும் தெரியாமல், திசையும் தெரியாமல் தடுமாறும் இளைஞர்களுக்கு இந்நூல் ஓர் ஒளிவிளக்காக அமையும்.






Reviews
There are no reviews yet.