சாந்தியின் பிறப்பிடம் இறை சந்நிதானம்
இந்த நூலை வாசிக்கும் ஒருவர் சிலபோது தனது தொழுகைகளை புதிதாகத் தொழ வேண்டும். நான் இதுவரை தொழவில்லையோ! என்றுகூட சிந்திக்கலாம். தொழுகையின் பெறுமதி, அதன் நோக்கங்கள். தொழுகைக்கு அவசியமான மனநிலைகள், தொழுகையில் செலுத்தப்பட வேண்டிய கவனங்கள், அசைவுகள் மற்றும் ஓதல்களின் தாத்பரியங் கள், தொழுகையில் அல்லாஹ்வுடனான ஈடுபாட்டை அதிகரிக்கும் சொற் பிரயோகங்கள். அவற்றின் கனதியான செறிவான உள்ளடக்கங்கள். உள்ளார்ந்த ஈடுபாடு கொண்ட தொழுகையால் தொழுகையாளிடம் விருத்தி அடைகின்ற புனிதங்கள் என தொழுகை பற்றி தேடி அறிந்தவை கள் அனுபவித்தவைகள் பலவற்றையும் நூலாக்கம் செய்தவர் தனது நூலில் இற்றைப்படுத்தி இருக்கிறார். பல் பரிமாணங்கள் கொண்ட வணக்கமாக வடிவமைக்கப்பட்டிருக்கின்ற தொழுகையின் அழகை இந்த விபரிப்பு எடுத்துக்காட்டுவதாக இருக்கின்றது.
ஆன்மீகப் பரிமாணங்களுடன் லௌகீகப் பரிமாணங்களைக் கொண்ட தாகவும் தொழுகை பிரகாசிப்பதை சுட்டிக்காட்ட இந்நூல் தவறவில்லை. எனினும் தொழுகையின் அடைவு அர்ஷுடையவனின் பாதங்களில் வீழ்ந்து, அவனது மகத்துவத்திற்கு முன்னால் பணிந்து, அவனது பெரு வல்லமையின் வீச்சுக்கு அஞ்சி அடியான் தன்னை வெளிப்படுத்திக் கொள்வதுதான் என்பதை இந்நூல் ஆழமாக வலியுறுத்தியிருக்கின்றது. அதுமட்டுமல்ல ஏகனை பணிந்து அவனது வல்லமைக்கு அஞ்சும் பக்குவம் தொழுகையாளியின் வாழ்க்கை முழுவதிலும் வியாபித்து அவனை அல்லாஹ்வின் உண்மை அடியானாக மாற்றுவதிலும் பெரும் பங்குவகிக்கிறது என்பதையும் நூல் புரியவைக்கிறது.






Reviews
There are no reviews yet.