எதற்காக நாம் படைக்கப்பட்டிருக்கின்றோம் எனும் உயரிய லட்சியத்தையும் நமது வரலாறு நமக்குக் கற்றுத் தரும் மேலான வாழ்க்கை முறைகளை யும் மக்கள் மன்றத்தில் வைப்பதே இந்த நூலின் நோக்கம்.
எல்லாமே நமக்கு இங்கு வேடிக்கைதான். காட்சிகளைப் பார்த்து கை கொட்டிச் சிரித்துக் காலத்தைக் கடத்துகின்றோம். வெறும் பார்வையாளர் களாக வாழ்ந்து யாருக்கும் தெரியாமல் ஒருநாள் இறந்து போகின்றோம். மக்கள் மனதில் இருந்து மறைந்து போகின்றோம். இதற்காகவா நம்மைப் படைத்தான் இறைவன்?
யாரைப் பற்றியும் கவலைப்பட யாரிடமும் காலமும் இல்லை. கண்ணீர் சிந்த யாருக்கும் நேரமுமில்லை; மனமுமில்லை. மனிதனை இறைவன் எதற்காகப் படைத்தானோ அதற்கு எதிராக எந்திர கதியில் வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருக்கின்றோம். இதற்காகவா நம்மைப் படைத்தான் இறைவன்?
சமூகத்தில் படர்ந்து கிடக்கும் தீமைகளையும் பொய்மைகளையும் நான் ஒருவன் தனியாக எப்படி எதிர்த்துப் போராடுவது என்ற தயக்கமே இன்றைய இளைய சமுதாயத்தின் தடைக்கல்லாக இருக்கிறது. முடியாது என நினைக்காதீர்கள்! சோம்பல் முறியுங்கள்! சூழல் மாற்றுங்கள்! ஒருபோதும் கலங்காதீர்கள், இறைவன் நம்மோடு இருக்கின்றான்.
“நீங்கள் மனந்தளர்ந்து விடாதீர்கள்; கவலையும் கொள்ளாதீர்கள். நீங்கள் இறைநம்பிக்கையுடையோராயின், நீங்களே மேலோங்குவீர்கள்” (3:139)






Reviews
There are no reviews yet.